சென்னையின் பல்வேறு பகுதிகளில் மின் வாரிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், ஜூன் 25-ம் தேதி (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் (TANGEDCO) அறிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், திட்டமிட்ட பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக குறிப்பிட்ட பகுதிகளில் தற்காலிகமாக மின்சாரம் நிறுத்தப்படும் என்றும், பணிகள் திட்டமிட்ட நேரத்திற்கு முன்பாக முடிந்தால் உடனடியாக மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை ஏற்படும் பகுதிகளில் திருநீர்மலை, திருமுடிவாக்கம், ஐயப்பன்தாங்கல் மற்றும் அண்ணாசாலை பகுதிகள் முக்கியமாக இடம்பெற்றுள்ளன.
திருநீர்மலை பகுதியில் தேரடி தெரு, கிழக்கு மற்றும் தெற்கு மாட வீதிகள், குளக்கரை தெரு, வி.ஜி.என் மகாலட்சுமி நகர், திருநீர்மலை பிரதான சாலை, வேம்புலி அம்மன் கோயில் தெரு, பஜனை கோயில் தெரு, மல்லிமா வீதி, சிவராஜ் தெரு, ஒய்யாளியம்மன் கோயில் தெரு, வைத்தியகார தெரு, மேட்டு தெரு, ஜெகஜீவன் ராம் தெரு, சர்வீஸ் சாலை மற்றும் காந்தி தெரு உள்ளிட்ட பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.
திருமுடிவாக்கம் பகுதியில் எம்.கே.பி நகர், மகளிர் தொழிற்பேட்டை பூங்கா, திருநீர்மலை பிரதான சாலை, பெருமாள் நகர், ஸ்ரீ கிருஷ்ணா நகர், வழுதலம்பேடு, மைக்ரோ எஸ்டேட், பாம் ரிவியரா மற்றும் அமர்பிரகாஷ் அபார்ட்மெண்ட்கள், குன்றத்தூர், குமரன் நகர், மகாலட்சுமி கூட்டுறவு சங்கம், பிகேவி மகா நகர், கலைமகள் நகர், கற்பகம் நகர் மற்றும் டசியோவா தொழிற்பேட்டை பகுதிகளிலும் மின்தடை அமலில் இருக்கும்.
ஐயப்பன்தாங்கல் பகுதியில் பிரின்ஸ் ஹைலேன்ட் அபார்ட்மெண்ட், துலிவ் தக்ஷின் அபார்ட்மெண்ட், சுப்பையா நகர், பாலாஜி அவென்யூ, பத்மாவதி நகர், சுப்பிரமணி நகர் மற்றும் கருமாரி அம்மன் நகர் பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும்.
அண்ணாசாலை மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் பூத பெருமாள் தெரு, ஒயிட்ஸ் ரோடு, அண்ணாசாலை, ஜி.பி. ரோடு, கிளப் ஹவுஸ் ரோடு, பட்டுலால்ஸ் ரோடு, எக்ஸ்பிரஸ் அவென்யூ பகுதி, லிங்க் ரோடு, இந்தியன் வங்கி வளாகம், எத்திராஜ் கல்லூரி, ராணி மெய்யம்மை ஹாஸ்டல், ஏர் இந்தியா அலுவலகம், மார்ஷல்ஸ் ரோடு, மாண்டியத் லேன், கனரா வங்கி, தாஜ் ஹோட்டல், வுட்ஸ் ரோடு மற்றும் பி.ஆர் காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட பகுதிகளிலும் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை அமல்படுத்தப்படுவதால், பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் முன்கூட்டியே தேவையான ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.