ஈரோடு: தவெக நிர்வாகி செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:
டிசம்பர் 16ஆம் தேதி நடிகர் விஜய் ஈரோட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இதற்காக, ஈரோட்டில் வாரி மஹால் அருகே தவெக தலைவர் பரப்புரைக்கான அனுமதி கோரியிருந்தோம். சில பத்திரிகைச் செய்திகள், அந்த அனுமதி மறுக்கப்பட்டதாக வெளியானது. ஆனால் காவல்துறையிடம் விசாரித்தபோது, இதுவரை அனுமதி மறுக்கும் வகையில் எந்தக் கடிதமும் வழங்கப்படவில்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.
எச்சரிக்கையாக, டோல் கேட் அருகே மாற்று இடத்திற்கும் அனுமதி கோரி கடிதம் வழங்க உள்ளோம். விஜய்யின் வருகை ஈரோட்டில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். கொங்கு மண்டலம் யாருடைய கோட்டை என்பது இனிமேல் வெளிப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.