புதுடெல்லி: மக்களவையில் நடைபெற்ற வந்தே மாதரம் 150 ஆண்டு நிறைவு சிறப்பு விவாதத்தில் காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி உரையாற்றினார்.
அவர் கூறியதாவது: “சுதந்திரப் போராட்டத்தின் அடையாளமாக வந்தே மாதரம் திகழ்கிறது. காங்கிரஸ் மாநாட்டில் தான் முதன்முதலாக வந்தே மாதரம் பாடப்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக மக்களை ஒற்றுமைப்படுத்திய பாடல் இது.
பிரதமர் மோடி நன்றாகப் பேசுகிறார், ஆனால் அதில் உண்மையில்லை; முன்னும் பின்னும் முரண்பாடுகள் உள்ளன. இந்தியாவின் வளர்ச்சிக்கு நேரு அமைத்துத் தந்த அடித்தளம்தான் காரணம். நேரு குறித்து குறை கூறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார் பிரதமர்.
நாட்டின் முக்கிய பிரச்சினைகளிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவே பாஜக அரசு வந்தே மாதரம் குறித்து விவாதம் நடத்துகிறது. மேற்கு வங்க தேர்தல் வருவதால் தான் பாஜக வந்தே மாதரத்தை கையில் எடுத்துள்ளது. கடந்த காலத்தைப் பற்றி பேசுவதில் அரசியல் செய்கிறது பாஜக; ஆனால் நாட்டின் வளர்ச்சி குறித்த எதிர்கால இலக்குகள் அவர்களிடம் இல்லை. உங்களுக்கு அரசியல்தான் முக்கியம், எங்களுக்கு மக்களே முக்கியம்.”