சென்னையில் அரசுப் பள்ளி ஒன்றில் மாதவிடாய் காரணமாக 11 வயது மாணவி வகுப்பறைக்கு வெளியே நிற்க வைக்கப்பட்டதாக வெளியான தகவல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த சம்பவத்திற்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சம்பவம் குறித்து தமிழக அரசு உடனடியாக விசாரணை நடத்தி, பொறுப்புக்கூற வேண்டியவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், மாதவிடாய் காலத்தில் துர்நாற்றம் வீசுவதாகக் கூறி மாணவியை பள்ளி நேரம் முழுவதும் வகுப்பறைக்கு வெளியே நிற்க வைத்ததாக வெளியாகியுள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.
மாதவிடாய் என்பது பெண்களின் இயல்பான உடலியல் மாற்றமாகும். இதுகுறித்து சமூகத்தில் விழிப்புணர்வு அதிகரித்து வரும் நிலையில், கல்வி நிலையத்திலேயே இதுபோன்ற சம்பவம் நடந்ததாக கூறப்படுவது கவலைக்குரியதாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசுப் பள்ளிகளில் படிக்கும் பல மாணவிகள், போதிய கழிப்பறை வசதி மற்றும் சுத்தமான குடிநீர் வசதி இல்லாத காரணத்தால் மாதவிடாய் நாட்களில் பள்ளிக்கு வருவதையே தவிர்க்கும் சூழ்நிலை இன்னும் பல பகுதிகளில் நிலவி வருவதாக நயினார் நாகேந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த நிலையில், மாணவியின் மனநிலையையும் உடல்நலத்தையும் கருத்தில் கொள்ளாமல் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுவது பெண்கள் முன்னேற்றத்திற்கு பின்னடைவாக அமைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, மாநிலத் தலைநகரான சென்னையில் உள்ள அரசுப் பள்ளியிலேயே இத்தகைய சம்பவம் நடந்ததாக தகவல் வெளியாகியிருப்பது கல்வி அமைப்பின் மீதும், பெண்கள் பாதுகாப்பு மற்றும் மரியாதை குறித்த சமூக விழிப்புணர்வின் மீதும் கேள்விக்குறி எழுப்புவதாக அவர் கூறியுள்ளார்.
இந்த விவகாரத்தை தமிழக முதல்-அமைச்சர் உடனடியாக கவனத்தில் கொண்டு, சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும், மாணவியின் மனஉளைச்சலுக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், இதுபோன்ற சம்பவங்கள் இனி எங்கும் நடைபெறாத வகையில் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகங்களுக்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். மாணவிகளின் உடல்நலம், சுகாதாரம் மற்றும் மரியாதையை பாதுகாக்கும் வகையில் பள்ளிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டிய அவசியம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் போதுமான கழிப்பறை வசதிகள், சுத்தமான தண்ணீர் வசதிகள் மற்றும் மாதவிடாய் சுகாதார மேலாண்மை தொடர்பான அடிப்படை கட்டமைப்புகள் உள்ளதா என்பதை அரசு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். மாணவிகள் பாதுகாப்பாகவும், நம்பிக்கையுடனும் கல்வி கற்கும் சூழலை உருவாக்குவது அரசின் முக்கிய பொறுப்பாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் சுகாதார உரிமைகளை மதிக்கும் வகையில் அரசும் கல்வித்துறையும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்ற கோரிக்கையும் அவரது அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில், சம்பவம் குறித்து அதிகாரப்பூர்வ விசார