சென்னை: பிளாக்பஸ்டர் “உப்பெனா” படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான கீர்த்தி ஷெட்டி, அதன் பின் நடித்த படங்கள் முதல் படத்தின் வெற்றியை ஈடுசெய்ய முடியவில்லை. தொடர்ச்சியான தோல்விகளால், அவர் தெலுங்கு பட வாய்ப்புகளை இழந்த நிலையில், தற்போது தனது கவனத்தை தமிழ் சினிமாவுக்கு திருப்பியுள்ளார்.

தற்போது கீர்த்தி, “வா வாத்தியார்” உள்பட இரண்டு தமிழ் படங்களில் நடித்துள்ளார். வா வாத்தியார் படம் வரும் டிசம்பர் 12ஆம் தேதி வெளியாக உள்ளதால், அவர் புரமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

சமீபத்திய ஒரு நேர்காணலில், கீர்த்தி தனது அனுபவங்களை பகிர்ந்தார். “மிகச் சிறிய வயதிலேயே அதிக டிரோலிங்கை சந்தித்தேன். தொடர்ந்து என் படங்கள் வெற்றி பெறாதபோது, காரணமின்றி விமர்சனங்கள் வந்தன. நம் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட விஷயங்களுக்காக விமர்சனம் வரும்போது அது தாங்க முடியாத வலியை ஏற்படுத்தியது,” என்று அவர் கூறினார்.