வழக்கறிஞர்கள் அரசுப் பணியில் சேர சிறந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. குற்ற வழக்கு தொடர்பு துறையில் உள்ள அரசு உதவி வழக்கு நடத்துநர் நிலை–II பதவிக்கு டிஎன்பிஎஸ்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 61 காலிப்பணியிடங்களுக்கு இன்று (டிசம்பர் 2) முதல் விண்ணப்பம் செய்யலாம்.

TNPSC Assistant Public Prosecutor Exam 2025
டிஎன்பிஎஸ்சி குற்ற வழக்கு தொடர்பு துறையில் அரசு உதவி வழக்கு நடத்துநர் நிலை–II பதவிக்கான அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது. இதன்படி மொத்தம் 61 காலியிடங்கள் நிரப்பப்படுகின்றன. சட்டப் பட்டம் பெற்றவர்கள் இந்த வாய்ப்பிற்கு விண்ணப்பிக்கலாம். https://tnpsc.gov.in/ இணையதளத்தில் டிசம்பர் 2 முதல் 31 வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடக்கத் தேர்வு பிப்ரவரி மாதத்தில் நடைபெற உள்ளது.

இந்த ஆண்டுக்கான அனைத்து தேர்வுகளையும் முடித்த நிலையில், தேர்வர்கள் ஆவலுடன் இருந்த இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.


பதவிக் குறிப்புகள்

  • பதவியின் பெயர்: அரசு உதவி வழக்கு நடத்துநர் நிலை – II

  • துறை: குற்ற வழக்கு தொடர்பு

  • காலிப்பணியிடங்கள்: 61

  • ஊதிய நிலை: Level 22

  • இணையதளம்: tnpsc.gov.in

குறிப்பிட்ட காலியிட எண்ணிக்கை முதன்மைத் தேர்வு முடிவுகள் வரும் வரை மாற்றமடையலாம் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.


தேர்வு நடைமுறை – 3 நிலைகள்

  1. முதல்நிலைத் தேர்வு (Preliminary Exam)

  2. முதன்மைத் தேர்வு (Main Exam)

  3. நேர்முகத் தேர்வு (Interview)

முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே முதன்மைத் தேர்விற்கு அனுமதிக்கப்படுவர். அதன் பின்னர் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்று தகுதியானவர்களுக்கு ஹால் டிகெட் வழங்கப்படும். முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு இறுதி நியமனங்கள் மேற்கொள்ளப்படும்.


வயது வரம்பு (01.07.2025 அடிப்படையில்)

  • OC – 26 முதல் 36 வயது

  • OC மாற்றுத்திறனாளிகள் – 46 வயது வரை

  • முன்னாள் ராணுவத்தினர் – 50 வயது வரை

  • BC / MBC / SC / ST / SCA – வயது வரம்பில்லை


தகுதி விதிமுறைகள்

  • யுஜிசி அங்கீகரித்த பல்கலைக்கழகம்/கல்வி நிறுவனத்தில் சட்டப் பட்டப் படிப்பு (LLB) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  • வழக்கறிஞர் சங்கத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும்.

  • குற்றவியல் நீதிமன்றங்களில் குறைந்தது 5 ஆண்டுகள் வழக்கு நடத்திய அனுபவம் அவசியம்.

  • தற்காலிக அரசு உதவி வழக்கு நடத்துநராக பணியாற்றிய காலமும் அனுபவமாக கருதப்படும்.


தமிழ் தகுதி – கட்டாயம்

தேர்வர்கள் கீழ்கண்ட ஒன்றை பூர்த்தி செய்திருக்க வேண்டும்:

  • 10ஆம் வகுப்பு தமிழை ஒரு பாடமாகக் கற்றிருக்க வேண்டும்
    அல்லது

  • 10ம்/12ம் வகுப்பில் தமிழை பயிற்று மொழியாகக் கொண்டு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
    அல்லது

  • டிஎன்பிஎஸ்சி நடத்தும் இரண்டாம் வகுப்பு தமிழ் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


முதல்நிலைத் தேர்வு அமைப்பு

மொத்தம் 200 கேள்விகள் – 300 மதிப்பெண்கள்

  • பொது அறிவு – 75

  • திறனறிவு மற்றும் மனக்கணக்கு – 25

  • சட்டம் – 100

குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் – 90
கொள்குறி கேள்விகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அமையும்.


முதன்மைத் தேர்வு

மொத்தம் 5 தாள்கள்.

  • முதல் தாள் – தமிழ் மொழித் தகுதித் தேர்வு

  • மொத்த மதிப்பெண்கள் – 400

  • தமிழில் குறைந்தது 40 மதிப்பெண்கள், மற்ற தாள்கள் சேர்த்து குறைந்தது 120 மதிப்பெண்கள் பெற வேண்டும்.

  • அனைத்து தாள்களும் விளக்கவுரையாக (Descriptive) அமையும்.


நேர்முகத் தேர்வு

  • 60 மதிப்பெண்கள்

  • முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்முக மதிப்பெண்கள் சேர்த்து 460 மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி பட்டியல் வெளியிடப்படும்.


விண்ணப்பிக்கும் முறை

சட்டவழக்கறிஞர்கள் https://tnpsc.gov.in/ இணையதளத்தில் தேவையான விவரங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

  • விண்ணப்பக் கட்டணம் – ரூ.100

  • OTR பதிவு அவசியம்

  • ஏற்கனவே பதிவு இருந்தால் நேரடியாக விண்ணப்பிக்கலாம்.


முக்கிய தேதிகள்

விவரம்தேதி
விண்ணப்பம் தொடக்கம்02.12.2025
விண்ணப்பிக்க கடைசி நாள்31.12.2025
விண்ணப்ப திருத்த காலம்04.01.2026 – 06.01.2026
முதல்நிலைத் தேர்வு15.02.2026 (காலை 9.30 – 12.30)
முதன்மைத் தேர்வுபின்னர் அறிவிக்கப்படும்

டிஎன்பிஎஸ்சி தேர்வை எதிர்பார்த்திருந்த சட்டவழக்கறிஞர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். தேர்வு பாடத்திட்டம் மற்றும் முழு விதிமுறைகள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ளன.