
தமிழகத்தின் அதிகரித்து வரும் மின்தேவையை எதிர்கொள்ளும் வகையில், தூத்துக்குடியில் ₹20,800 கோடி மதிப்பில் புதிய 1,600 மெகாவாட் Supercritical Thermal Power Station அமைக்கப்படும் என முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் சட்டப்பேரவையில் இன்று அறிவித்தார்.
புதிய மின்நிலையம் தற்போதைய தூத்துக்குடி அனல்மின் நிலைய வளாகத்தில் அமைக்கப்படும். இதில் தலா 800 MW திறன் கொண்ட இரண்டு புதிய மின் உற்பத்தி அலகுகள் அமைக்கப்பட உள்ளன. திட்டம் Public–Private Partnership (PPP) முறையில் செயல்படுத்தப்படும்.
தற்போது தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் செயல்பட்டு வரும் தலா 210 MW திறன் கொண்ட ஐந்து பழைய நிலக்கரி மின் அலகுகளின் மொத்த திறன் 1,050 MW ஆகும். சுற்றுச்சூழல் விதிமுறைகளுக்கு ஏற்ப இந்த பழைய அலகுகள் படிப்படியாக மாற்றப்பட்டு, புதிய உயர் திறன் supercritical units பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தொழில்துறை வளர்ச்சி, நகரமயமாக்கல் மற்றும் வீட்டு மின்தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதால் மின் உற்பத்தி மற்றும் transmission infrastructure-ல் பெரிய அளவிலான முதலீடு தேவைப்படுவதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.
இதனுடன் மாநிலத்தின் மின் பரிமாற்ற அமைப்பை மேம்படுத்த ₹33,066 கோடி Tamil Nadu Transmission Improvement Scheme செயல்படுத்தப்படும். இதன் கீழ் 196 புதிய துணை மின் நிலையங்கள் மற்றும் 15,000 கி.மீ. transmission lines அமைக்கப்படும்.
மேலும் renewable energy மூலம் கிடைக்கும் கூடுதல் மின்சாரத்தை சேமித்து peak demand நேரத்தில் பயன்படுத்த battery storage systems உருவாக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன.
தூத்துக்குடி திட்டம் நிறைவேற்றப்பட்டால், தென் தமிழகத்தின் மின் உற்பத்தி திறனை அதிகரிப்பதுடன் மாநிலத்தின் மொத்த power security-க்கும் முக்கிய பங்களிப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.