
தமிழ்நாடு சட்டசபையில் காவல்துறை மானியக் கோரிக்கை விவாதத்திற்கு முதலமைச்சர் விஜய் பதிலுரை வழங்கியதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
சட்டசபையில் இருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி, திமுக எழுப்பிய சட்டம்-ஒழுங்கு உள்ளிட்ட கேள்விகளுக்கு முதலமைச்சரின் பதிலுரையில் உரிய பதில் கிடைக்கவில்லை என குற்றம்சாட்டினார்.
அப்போது அவர், “அதே acting, அதே punch dialogue, Reels-க்காக மட்டுமே முதல்வர் இந்தப் பதிலுரையை பேசியுள்ளார்” என்று விமர்சித்தார். மேலும், மனப்பாடம் செய்ததை ஒப்புவிப்பது போல, தவறான மற்றும் பொய்யான குற்றச்சாட்டுகளை முதல்வர் முன்வைத்ததாகவும் கூறினார்.
திமுக தரப்பில் முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கு பதிலாக, பழைய அரசியல் விவகாரங்கள் மற்றும் குற்றச்சாட்டுகளை எடுத்துரைத்ததாக உதயநிதி விமர்சித்தார்.
மேலும், அந்த குற்றச்சாட்டுகளுக்கு சட்டசபையிலேயே விளக்கம் அளிக்க தமக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும், அதனால் திமுக வெளிநடப்பு செய்ததாகவும் அவர் தெரிவித்தார். இன்றைய பேரவை அமர்வில் சபாநாயகர் எதிர்க்கட்சித் தலைவர் பதிலளிக்க அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து திமுக தர்ணாவிலும் பின்னர் வெளிநடப்பிலும் ஈடுபட்டது உறுதியாகியுள்ளது.