
தமிழ் சினிமாவில் பல நினைவில் நிற்கும் வெற்றிப் படங்களையும் evergreen பாடல்களையும் கொடுத்த ராமராஜன்–இளையராஜா கூட்டணி, மீண்டும் ஒன்றிணைந்துள்ளது.
ராமராஜன் நடிக்கும் புதிய படத்துக்கு “கடவுள் தந்த பரிசு” என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் காசிமாயன் கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார். படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். இது ராமராஜன்–இளையராஜா இருவரும் இணையும் 25-வது படம் ஆகும்.
இந்த கூட்டணி தமிழ் சினிமாவில் எங்க ஊரு பாட்டுக்காரன், செண்பகமே செண்பகமே, கரகாட்டக்காரன், ஊருவிட்டு ஊருவந்து, வில்லுப்பாட்டுக்காரன், தெம்மாங்கு பாட்டுக்காரன், அண்ணன் உள்ளிட்ட பல படங்கள் மூலம் ரசிகர்களிடம் தனி அடையாளம் பெற்றது. குறிப்பாக ‘கரகாட்டக்காரன்’ திரைப்படமும் அதன் பாடல்களும் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்படுகின்றன.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு 2024-ல் வெளியான ‘சாமானியன்’ படத்தின் மூலம் ராமராஜன்–இளையராஜா மீண்டும் இணைந்தனர். தற்போது ‘கடவுள் தந்த பரிசு’ மூலம் அவர்களின் 25-வது collaboration உருவாகிறது.
இந்தப் படத்தில் நகைச்சுவைப் பகுதிகளை ராஜகோபால் எழுதுகிறார். வசனங்களை ராஜகோபால் மற்றும் எம். அடைக்கலம் இணைந்து எழுதுகின்றனர். மேலும், செந்தில் மற்றும் கோவை சரளா நீண்ட இடைவெளிக்குப் பிறகு ராமராஜனுடன் இணைந்து நடிக்கிறார்கள். பாடல் பதிவு பணிகள் தொடங்கியுள்ளதுடன், படப்பிடிப்புக்கான தயாரிப்புகளும் நடைபெற்று வருகின்றன.c