
Jammu & Kashmir Bank-ன் மூத்த அதிகாரி Saadut Hussain Pampori-யை மீண்டும் பணியில் சேர்க்க Jammu & Kashmir and Ladakh High Court உத்தரவிட்டுள்ளது.
அவர் மீது ‘anti-national activities’ மற்றும் #TortureKashmir social media campaign-ல் தொடர்பு இருந்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு, 2024 ஜூலை 15 அன்று regular departmental inquiry இல்லாமல் பணிநீக்கம் செய்யப்பட்டார்.
இந்த பணிநீக்கத்தை எதிர்த்து அவர் High Court-ஐ அணுகினார். வழக்கை விசாரித்த நீதிபதி Sanjay Dhar, சரியான விசாரணை அல்லது போதுமான ஆதாரம் இல்லாமல் ஒரு bank MD அல்லது CEO, ஊழியரை நேரடியாக பணிநீக்கம் செய்ய முடியாது என்று குறிப்பிட்டார்.
President அல்லது Governor போன்ற உயர்ந்த அரசியலமைப்பு பதவிகளுக்கு வழங்கப்படும் exceptional powers-ஐ, ஒரு வங்கி நிர்வாக அதிகாரிக்கு அதே அளவில் வழங்க முடியாது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து Pampori-யின் dismissal order ரத்து செய்யப்பட்டு, அவரை மீண்டும் பணியில் சேர்க்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு employment-related disciplinary action-களில் due process மற்றும் proper inquiry முக்கியம் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறது.