
ரஷ்யாவில் உள்ள ஒரு electronics store-ல் வாடிக்கையாளர் ஒருவர் humanoid robot-ஐ தள்ளியதைத் தொடர்ந்து, அந்த robot அவரை காலால் தாக்க முயன்றது போல தெரியும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
இந்த சம்பவம் ரஷ்யாவின் Saratov நகரில் உள்ள Volga Store என்ற கடையில் நடந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கடையில் attraction மற்றும் technology consultant ஆக பயன்படுத்தப்பட்ட humanoid robot “Syoma” என அழைக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
வீடியோவில் வாடிக்கையாளர் ஒருவர் robot அருகே சென்று கைகுலுக்க முயற்சி செய்கிறார். Robot பதிலளிக்காத நிலையில், அவர் அதை லேசாக தள்ளுவது போன்ற காட்சி பதிவாகியுள்ளது.
அதன்பிறகு robot திடீரென அந்த நபரை நோக்கி நகர்ந்து, தனது காலை உயர்த்தி kick செய்ய முயல்வது போன்ற movement செய்கிறது. அருகில் இருந்த ஊழியர்கள் உடனடியாக robot-ஐ கட்டுப்படுத்த முயன்றனர். பின்னர் robot நிறுத்தப்பட்டதாக reports தெரிவிக்கின்றன.
இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி, பலர் அதை ‘Terminator’ மற்றும் ‘Enthiran’ திரைப்படங்களுடன் ஒப்பிட்டு கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
ஆனால் robot உண்மையாகவே autonomously அந்த நபரை தாக்க முடிவு செய்ததா என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை. Robot remotely controlled செய்யப்பட்டதா, pre-programmed movement காரணமா அல்லது staged video-ஆ என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.
எனவே இதை “AI robot கோபமடைந்து மனிதரை தாக்கியது” என்று உறுதியாக குறிப்பிடுவதற்கு ஆதாரம் இல்லை. Video-வில் தாக்குவது போன்ற movement மட்டுமே தெளிவாக காணப்படுகிறது.