Meta நிறுவனம் தனது புதிய ‘Muse’ personal AI agent-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. கேள்விகளுக்கு பதில் அளிப்பதுடன் மட்டுமல்லாமல், பயனரின் அனுமதியுடன் பல்வேறு apps மற்றும் online services-ஐ அணுகி முழுமையான tasks-ஐ தானாக நிறைவேற்றும் வகையில் Muse உருவாக்கப்பட்டுள்ளது.

Muse மூலம் email அனுப்புதல், calendar schedule நிர்வகித்தல், பொருட்கள் வாங்குதல் அல்லது விற்பனை செய்தல், பயண திட்டமிடல் மற்றும் booking, forms நிரப்புதல் உள்ளிட்ட பல வேலைகளைச் செய்ய முடியும். Payments, shopping, health, smart-home உள்ளிட்ட பல சேவைகளுடனும் இணைக்கும் திறன் இருப்பதாக Meta தெரிவித்துள்ளது.

இந்த AI agent-ஐ தனி mobile app மூலமாகவும் WhatsApp வழியாகவும் பயன்படுத்த முடியும். ஆரம்பத்தில் அமெரிக்க பயனர்களுக்கு rollout செய்யப்பட்டுள்ள Muse, இலவச சேவையுடன் paid subscription options-யும் கொண்டுள்ளது. Reuters தகவலின்படி மாதத்திற்கு $20 மற்றும் $100 மதிப்பிலான subscription tiers உள்ளன.

பாதுகாப்புக்காக Muse தனியான secure virtual environment-ல் செயல்படுவதுடன், அதன் செயல்பாடுகளை கண்காணிக்க secondary safety AI அமைப்பும் பயன்படுத்தப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில் Meta-வின் internal testing-ல் சில privacy, security மற்றும் reliability பிரச்சினைகள் கண்டறியப்பட்டிருந்ததாக Reuters தெரிவித்துள்ளது. இதனால் launch முன்பு கூடுதல் பாதுகாப்பு மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Meta CEO Mark Zuckerberg முன்வைத்து வரும் “personal superintelligence” vision-ன் முக்கிய பகுதியாக Muse பார்க்கப்படுகிறது. Chatbot கேள்விகளுக்கு பதிலளிப்பதைத் தாண்டி, பயனருக்காக நேரடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளும் AI agents அடுத்த பெரிய போட்டி தளமாக உருவாகி வரும் நிலையில் Meta இந்த புதிய முயற்சியை முன்னெடுத்துள்ளது.