படைவீரர் கொடி நாள் – பிரதமர் மோடி பங்களிப்பு, மக்களுக்கு அழைப்பு
டெல்லி: இந்தியாவின் முப்படை வீரர்களின் அரும்பணிகளையும், தியாகத்தையும் போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 7ஆம் தேதி படைவீரர் கொடி நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்த நாளில் வீரமரணமடைந்த மற்றும் காயமடைந்த படைவீரர்களின் குடும்பங்களுக்கு உதவிடும் வகையில் நிதி சேகரிக்கப்படுகிறது.
அரசியல் கட்சியினர், பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் நன்கொடை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று படைவீரர் கொடி நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, முப்படை வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி நிதி அளித்தார். மேலும், மக்கள் அதிக அளவில் பங்களிக்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.