சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ஜி.வி. பிரகாஷ் குமார், தொடர்ந்து பல்வேறு மொழிகளில் பெரிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இசையமைப்புடன் சேர்த்து, நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

அவரது நடிப்பில் கடைசியாக வெளியான படம் பிளாக்மெயில். மு. மாறன் இயக்கிய இந்த படத்தில் தேஜு அஸ்வினி கதாநாயகியாக நடித்திருந்தார். படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

அதனைத் தொடர்ந்து, ஜி.வி. பிரகாஷ் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை, இயக்குநர் பிரதீப் ரங்கநாதனின் உதவி இயக்குநராக பணியாற்றிய மரியா இளஞ்செழியன் இயக்குகிறார். நகைச்சுவை கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தில் நடிகர் அப்பாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இசையமைப்பை ஜஸ்டின் பிரபாகரன் மேற்கொள்கிறார்.

பியாண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஹாப்பி ராஜ் என பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டு, அதை நடிகர் துல்கர் சல்மான் வெளியிட்டுள்ளார்.