ஆந்திரப் பிரதேசத்தின் முக்கியமான பாசனத் திட்டங்களில் ஒன்றான Poola Subbaiah Veligonda Irrigation Project-ன் Phase-I இன்று முதல்வர் என். சந்திரபாபு நாயுடுவால் திறந்து வைக்கப்பட்டது. இதன் மூலம் கிருஷ்ணா நதியிலிருந்து சுமார் 10.70 TMC நீர் Nallamala Sagar reservoir-க்கு கொண்டு செல்லப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

Phase-I மூலம் சுமார் 1.19 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி கிடைப்பதுடன், கிட்டத்தட்ட 4 லட்சம் மக்களுக்கு குடிநீர் வழங்க முடியும் என அரசு கூறுகிறது. முழுத் திட்டமும் முடிவடைந்தால் சுமார் 4.47 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த திட்டம் சுமார் 30 ஆண்டுகளாக பேசப்பட்டு வந்த ஒன்று. 1996 மார்ச் 5 அன்று ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேசத்தின் முதல்வராக இருந்தபோது தான் அடிக்கல் நாட்டிய திட்டம் இன்று நிறைவேறியுள்ளதாக சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். மேலும், இடம்பெயர்ந்த 6,206 குடும்பங்களுக்கு சுமார் ₹768 கோடி மறுவாழ்வு இழப்பீடு வழங்கப்பட்டதாக தற்போதைய அரசு கூறியுள்ளது.

ஆனால் இந்த திறப்பு விழாவைத் தொடர்ந்து அரசியல் மோதல் வெடித்துள்ளது. முன்னாள் முதல்வர் மற்றும் YSRCP தலைவர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி, Veligonda தனது தந்தை ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் கனவுத் திட்டம் என்றும், கடினமான twin-tunnel பணிகளில் பெரும்பாலானவை YSRCP ஆட்சியில்தான் முடிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். நாயுடு திட்டத்தின் வரலாற்றை தனது சாதனையாக மாற்ற முயற்சிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

YSRCP தரப்பின் கூற்றுப்படி, YSR மற்றும் ஜெகன் ஆட்சிக்காலங்களில் சேர்த்து திட்டத்தின் 85%க்கும் மேற்பட்ட பணிகள் முடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதனால் தற்போதைய திறப்பு விழா credit politics ஆக மாறியுள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன.

இதனால் Veligonda திட்டம் பாசன மற்றும் குடிநீர் திட்டமாக மட்டுமின்றி, “யார் திட்டத்தை உருவாக்கினர்? யார் முடித்தனர்?” என்ற அரசியல் விவாதமாகவும் ஆந்திராவில் தீவிரமடைந்துள்ளது.