பீஜிங்கில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மேற்காசிய மோதல்களில் பாகிஸ்தான் மத்தியஸ்தராகச் செயல்படுவது குறித்த கேள்விக்கு சீனாவுக்கான இந்திய தூதர் விக்ரம் துரைசாமி அளித்துள்ள பதில்கள், சர்வதேச அளவில் இந்தியாவின் தனித்துவமான இடத்தைப் பறைசாற்றும் வகையில் அமைந்துள்ளன.
பாகிஸ்தான் ஒப்பீடு ஏன் தவறு? பாகிஸ்தானுடன் இந்தியாவை ஒப்பிடுவது நியாயமற்றது என்று குறிப்பிட்ட விக்ரம் துரைசாமி, இரு நாடுகளின் பொருளாதார நிலை மற்றும் சர்வதேசக் கட்டமைப்பில் வகிக்கும் பங்களிப்பை ஒப்பிட்டாலே இதற்கான பதில் கிடைத்துவிடும் என்றார். உலக நாடுகளுடன் இந்தியா கொண்டுள்ள ஆழமான பொருளாதார ஒருங்கிணைப்பு மற்றும் பாதுகாப்பு சார்ந்த பங்களிப்பை, பெரும்பாலான நாடுகளால் இன்னும் எட்ட முடியவில்லை என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
மத்தியஸ்தம் குறித்த இந்தியாவின் நிலைப்பாடு சர்வதேசப் பிரச்சினைகளில் மத்தியஸ்தம் செய்வது குறித்த கேள்விக்கு அவர் அளித்த விளக்கம்:
-
ஒரு நாடு எந்த மாதிரியான சமரச முயற்சியில் ஈடுபட வேண்டும் என்பதை அந்தந்த நாடுகளின் தேசிய நிலைப்பாட்டே தீர்மானிக்க வேண்டும்.
-
இந்தியா கடந்த காலங்களில் பலமுறை சமரச முயற்சிகளில் தனது பங்களிப்பை வழங்கியுள்ளது.
-
தற்போதைய சூழலில், ஏற்கனவே பல நாடுகள் மத்தியஸ்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதால், அதில் இந்தியா ஈடுபடுவது பயனுள்ளதாக இருக்குமா என்பது கேள்விக்குரியதே.
சீனாவின் நிலைப்பாடும் இந்தியாவும் மேற்காசியா அல்லது கிழக்கு ஐரோப்பிய நெருக்கடிகளைப் பொறுத்தவரை, இந்தியாவின் நிலைப்பாடு ஓரளவுக்குச் சீனாவின் நிலைப்பாட்டை ஒத்தே இருப்பதாகவும், தற்போதைய சூழலில் சீனாவோ அல்லது இந்தியாவோ நேரடியாக மத்தியஸ்தம் செய்யும் பணிகளை முன்னெடுக்கும் என்று தான் கருதவில்லை என்றும் அவர் தனது கருத்தைப் பகிர்ந்துகொண்டார்.