சென்னையில் வணிக காஸ் சிலிண்டர் விலை குறைவு: இன்று முதல் ₹10.50 தள்ளுபடி

சென்னை: வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எடையுள்ள சமையல் காஸ் சிலிண்டரின் விலையில் இன்று (டிசம்பர் 1) இருந்து ரூ.10.50 குறைப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால், ஒரு சிலிண்டரின் புதிய விலை ரூ.1,739.50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற அரசு எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச கச்சா எண்ணெய் விலை மாற்றங்களை கருத்தில் கொண்டு, ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் சமையல் காஸ் விலையில் மாற்றம் செய்து வருகின்றன.

கடந்த சில மாதங்களில் வணிக சிலிண்டர் விலையில் பல கட்ட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

  • செப்டம்பர் 1: ரூ.51.50 குறைப்பு

  • ஆகஸ்ட் 1: ரூ.33.50 குறைப்பு

  • ஜூலை 1: ரூ.58.50 குறைப்பு

  • ஜூன்: ரூ.24 குறைப்பு

  • அக்டோபர் 1: ரூ.16 உயர்வு

  • நவம்பர் 1: ரூ.4.50 குறைப்பு

வீட்டு பயன்பாட்டிற்கான 14.2 கிலோ எடையுள்ள சிலிண்டரின் கடந்த மாத விலை ரூ.868.50 ஆக இருந்தது. ஆனால், இந்த மாதத்திற்கு எந்த மாற்றமும் செய்யப்படாமல் அதே விலையிலேயே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த சமீபத்திய விலை மாற்றம் சிறு தொழில்களுக்கும், ஹோட்டல் மற்றும் உணவகங்களுக்கு சிறிதளவு நிவாரணமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.