தமிழ்நாடு சட்டப்பேரவையில் பாமக எம்.எல்.ஏ. சவுமியா அன்புமணி ஆற்றிய உரைகள் சமூக வலைதளங்களில் பாராட்டைப் பெற்ற நிலையில், அதைத் தொடர்ந்து புதிய அரசியல் விவாதமும் உருவாகியுள்ளது.

சட்டப்பேரவையில் முதன்முறையாக உறுப்பினராக செயல்பட்டு வரும் சவுமியா அன்புமணி, குறிப்பாக கிராமப்புற மகளிரின் நிலை, மதுவால் குடும்பங்களுக்கு ஏற்படும் பாதிப்பு, பெண்களின் வாழ்க்கைச் சிக்கல்கள் போன்ற விஷயங்களை முன்வைத்து பேசியுள்ளார். அவரது பேச்சுக்கு சமூக வலைதளங்களில் ஒரு தரப்பினர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

மதுவை அரசின் வருவாய் ஆதாரமாக மட்டும் பார்க்கக் கூடாது என்றும், பண்டிகை நாட்களிலாவது டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை வழங்க வேண்டும் என்றும் அவர் சட்டப்பேரவையில் வலியுறுத்தியிருந்தார். “மது வணிகத்தை ஊக்குவிப்பது பெண்களுக்கும் சமூகத்துக்கும் ஏற்றதல்ல” என்ற அவரது கருத்தும் கவனம் பெற்றது.

இதற்கு மத்தியில், இந்திய மாணவர் கூட்டமைப்பு (SFI) மாநில தலைவர் மிருதுளா, சவுமியா அன்புமணியை அரசியல் ரீதியாக முன்னிறுத்துவது குறித்து கடுமையான விமர்சனம் முன்வைத்துள்ளார்.

பாமகவின் கடந்தகால சாதி அரசியல் மற்றும் வன்முறை குற்றச்சாட்டுகள் மீதான விமர்சனங்களை மறைக்க, சவுமியா அன்புமணியின் சட்டமன்ற பேச்சுகள் அதிகமாக முன்னிலைப்படுத்தப்படுகின்றன என்ற வகையில் அவர் கருத்து தெரிவித்துள்ளார். இந்த கருத்து வெளியானதும் சமூக வலைதளங்களில் ஆதரவும் எதிர்ப்பும் உருவானது.

PMK ஆதரவாளர்கள் எதிர்ப்பு

மிருதுளாவின் கருத்துக்கு பாமக ஆதரவாளர்கள் மற்றும் சவுமியா அன்புமணியை ஆதரிக்கும் சமூக வலைதள பயனர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஒரு தனிநபர் எம்.எல்.ஏ.வின் சட்டமன்ற செயல்பாடுகளை, அவரது கட்சியின் கடந்தகால அரசியல் விவாதங்களுடன் மட்டும் இணைத்து மதிப்பிடுவது சரியல்ல என்றும் அவர்கள் வாதிட்டுள்ளனர்.

மற்றொரு பக்கம், SFI மற்றும் இடதுசாரி ஆதரவாளர்கள் மிருதுளாவின் விமர்சனத்தை ஆதரித்து, ஒரு அரசியல் கட்சியின் வரலாறு மற்றும் அதன் தற்போதைய image-building இரண்டையும் தனித்தனியாக பார்க்க முடியாது எனக் கூறுகின்றனர்.

சவுமியாவின் மற்ற Assembly speeches-களும் கவனம்

சவுமியா அன்புமணி மதுவிலக்கு மட்டுமல்லாமல் சுற்றுச்சூழல் மற்றும் நீர்வள பிரச்சினைகளையும் சட்டமன்றத்தில் தொடர்ந்து எழுப்பி வருகிறார்.

காவிரி நீருக்காக கர்நாடகத்தை மட்டுமே சார்ந்திருக்காமல், மழைநீர் சேமிப்பு மற்றும் நீர்நிலை மேலாண்மையை மேம்படுத்த வேண்டும் என்று அவர் முன்பு பேசியிருந்தார்.

அதேபோல் சென்னை நகரில் காற்று மாசுபாடு கடுமையாக உள்ளது என்றும், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதிக்கும் திட்டங்களை அரசு கைவிட வேண்டும் என்றும் அவர் சமீபத்தில் வலியுறுத்தியுள்ளார்.

இதனால் சவுமியா அன்புமணியின் Assembly performance தற்போது அவரது தனிப்பட்ட அரசியல் image-ஐ மட்டும் அல்லாமல், PMK-வின் புதிய அரசியல் முகமாக அவரை முன்னிறுத்துகிறார்களா? என்ற பெரிய விவாதமாக மாறியுள்ளது.