தங்கம் விலை ஏற்றம் – இன்றைய நிலவரம்
நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்த நிலையில் இருந்தது. கடந்த அக்டோபர் 17-ஆம் தேதி ஒரு சவரன் ரூ.97,600 என்ற உச்சத்தை எட்டிய நிலையில், அதே மாதம் 28-ஆம் தேதி ரூ.88,600-க்கு சரிந்தது. அதன் பின்னர் தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடன் மாறுபட்ட போக்கை காட்டி வருகிறது. முதலீட்டாளர்கள் ஒருநாள் தங்கத்தில் கவனம் செலுத்த, மறுநாள் பங்கு சந்தைகளில் ஈடுபடுவதால் இந்த நிலை நீடிக்கிறது.
நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.20 குறைந்து ரூ.12,000-க்கும், சவரன் ரூ.160 குறைந்து ரூ.96,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இன்று விலை மீண்டும் உயர்ந்துள்ளது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.320 அதிகரித்து ரூ.96,320-க்கு, கிராமுக்கு ரூ.40 அதிகரித்து ரூ.12,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் உயர்வு கண்டுள்ளது; கிராமுக்கு ரூ.3 அதிகரித்து ரூ.199-க்கும், கிலோவுக்கு ரூ.3,000 அதிகரித்து ரூ.1,99,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.