சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் சாலையோரங்களில் நீண்ட நாட்களாக கேட்பாரற்று, போக்குவரத்து நெரிசலுக்குக் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 1,863 வாகனங்களை அப்புறப்படுத்த சென்னை மாநகராட்சி மற்றும் காவல்துறை இணைந்து நடவடிக்கை எடுத்துள்ளன.
அப்புறப்படுத்தப்பட்ட வாகனங்கள் மயிலாப்பூர், கொளத்தூர், புளியந்தோப்பு, வண்ணாரப்போட்டை மற்றும் கோயம்பேடு ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இருந்து இந்த வாகனங்கள் கண்டறியப்பட்டு, அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. தற்போது இவை அந்தந்த காவல் நிலைய வளாகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
ஏல நடைமுறை மற்றும் உரிமையாளர்களுக்கான அறிவிப்பு இந்த வாகனங்களின் முழுமையான விவரங்கள் பெருநகர சென்னை மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (www.chennaicorporation.gov.in) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
-
உரிமையாளர்கள் கவனத்திற்கு: இவ்வாகனங்களுக்குச் சொந்தக்காரர்கள், உரிய ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களைச் செய்தி வெளியான 15 நாட்களுக்குள் நேரில் சென்று அணுக வேண்டும்.
-
மின்னணு ஏலம்: 15 நாட்கள் காலக்கெடு முடிவடைந்த பிறகும் எவ்வித உரிமைகோரலும் இல்லாத வாகனங்கள், மின்னணு ஏலம் (E-Auction) முறைப்படி கழிவு செய்ய (ஏலம் விட) நடவடிக்கை எடுக்கப்படும்.
சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்தி போக்குவரத்துக்கு இடையூறு செய்வதைத் தவிர்க்குமாறும், உரிமையாளர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தித் தங்களுக்குச் சொந்தமான வாகனங்களை விரைந்து மீட்டுச் செல்லுமாறும் மாநகராட்சி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.