கடந்த தேர்தலில் 9 மணிக்கு 13.80%... இந்த தேர்தலில் 17.69% ஓட்டுப்பதிவு
சென்னை:
தமிழக சட்டசபை தேர்தலில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், காலை 9 மணி நிலவரப்படி 17.69 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. இது கடந்த 2021 தேர்தலை விட அதிகமாகும்.
கடந்த சட்டசபை தேர்தலில் காலை 9 மணி வரை 13.80 சதவீதம் மட்டுமே வாக்குகள் பதிவாகியிருந்தது. அதனை ஒப்பிடுகையில், இந்த முறை ஆரம்பத்திலேயே வாக்காளர்கள் அதிக ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
அதிக வாக்குப்பதிவுக்கு வாய்ப்பு
இந்த முறை தேர்தல் ஆணையம் 100 சதவீத வாக்குப்பதிவை இலக்காக கொண்டு பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது. காலை முதலே பல இடங்களில் வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசைகள் காணப்பட்டன.
SIR பணி பிறகு முதல் தேர்தல்
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகளுக்குப் பிறகு நடைபெறும் முதல் சட்டசபை தேர்தல் என்பதால், இந்த முறை வாக்குப்பதிவு சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மக்கள் உற்சாகம்
புதிய வாக்காளர்கள், பெண்கள், இளைஞர்கள் அதிக அளவில் வாக்களிக்க வருவது தேர்தல் சூழலை மேலும் உற்சாகமாக்கியுள்ளது.