ஓணம் பண்டிகையை முன்னிட்டு, மேற்கு தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் பயணிகளின் வசதிக்காக, மைசூரு – கண்ணூர் இடையே இரு ஜோடி சிறப்பு ரயில்களைத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயில்கள் சேலம், ஈரோடு, திருப்பூர் மற்றும் போத்தனூர் வழியாக இயக்கப்பட உள்ளன.
இந்த ரயில்களுக்கான முன்பதிவு ஜூலை 18-ம் தேதி காலை 8 மணி முதல் தொடங்குகிறது.
ரயிலின் கால அட்டவணை மற்றும் விவரங்கள்:
1. முதல் சிறப்பு ரயில்:
-
மைசூரு – கண்ணூர் (வண்டி எண்: 06227): ஆகஸ்ட் 25-ம் தேதி இரவு 10:30 மணிக்கு மைசூருவில் புறப்பட்டு, மறுநாள் மதியம் 2:00 மணிக்கு கண்ணூர் சென்றடையும்.
-
கண்ணூர் – பெங்களூரு கண்டோன்மெண்ட் (வண்டி எண்: 06228): ஆகஸ்ட் 26-ம் தேதி மாலை 6:25 மணிக்கு கண்ணூரில் புறப்பட்டு, மறுநாள் காலை 8:35 மணிக்கு பெங்களூரு கண்டோன்மெண்ட் சென்றடையும்.
2. இரண்டாம் சிறப்பு ரயில்:
-
மைசூரு – கண்ணூர் (வண்டி எண்: 06229): ஆகஸ்ட் 29-ம் தேதி இரவு 11:55 மணிக்கு மைசூருவில் புறப்பட்டு, மறுநாள் மாலை 5:50 மணிக்கு கண்ணூர் சென்றடையும்.
-
கண்ணூர் – பெங்களூரு கண்டோன்மெண்ட் (வண்டி எண்: 06230): ஆகஸ்ட் 30-ம் தேதி இரவு 7:45 மணிக்கு கண்ணூரில் புறப்பட்டு, மறுநாள் காலை 10:00 மணிக்கு பெங்களூரு கண்டோன்மெண்ட் சென்றடையும்.
நிறுத்தங்கள்:
இந்த ரயில்கள் சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர், பாலக்காடு, ஷொர்ணூர், திரூர், கோழிக்கோடு, வடகரை மற்றும் தலச்சேரி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இந்தச் சிறப்பு ரயில்கள் மொத்தம் 20 பெட்டிகளைக் கொண்டு இயக்கப்பட உள்ளன.